கடக்நாத் கோழிகளுக்கான தடுப்பூசி

13 Jul 2021 12:43 PM By Aqgromalin Team

 

கடக்நாத் அல்லது காளி மாசி என்பது மத்திய பிரதேசத்திலிருந்து வந்த ஒருவகை சாம்பல்-கருப்பு  நிறத்துடன் கூடிய கோழி இனமாகும். கறுப்பு  இறகுகளைக் கொண்ட  கோழி அதிகவெப்பமான காலநிலைகாரணமாக  மந்தமாக காணப்படும்.  இது அதிக  நோய் எதிர்ப்பு திறனைக் கொண்டுள்ளது.  இதற்கு குறைந்த பராமரிப்பே போதுமானது. ஒரு நாள் வயதான குஞ்சு சராசரியாக 50 கிராம் எடையுள்ளதாக இருக்கும், தன் எடை  சுமார் 5-6 மாதங்களில்   920 கிராம் -1.5 கிலோவாக அதிகரிக்கும்.


History of Kadaknath Chicken 1

   

நகரத்தில் உள்ள அனைத்து பிராய்லர் கோழி விற்பனை நிலையங்களில் உள்ள மற்ற இனக் கோழிகளின் கொழுப்பின் அளவான 13-25% சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, இந்த இனத்தின் இறைச்சியில் அதிகபட்ச புரதச் சத்தானது  (தோராயமாக 25%) சதவிகிதம் மற்றும் குறைந்த  அளவு கொழுப்பின் மதிப்பு 0.731.03% சதவிகிதமாக உள்ளது. மேலும், கடக்நாத் கோழியில் 184.75 மி.கி / 100 மி.கி குறைந்த கொழுப்பு உள்ளது. இதில் 18 அமினோ அமிலங்கள், வைட்டமின் பி 1, பி 2, பி 6, பி 12, சி, , நியாசின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

   

கடக்நாத் இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும்உகந்த்து.  ஏனெனில் இது இதயத்திற்கு செல்லும்  இரத்த ஓட்டத்தின் அளவை  அதிகரிக்கச் செய்கிறது. இதில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மேலும் இது மாதவிடாய் சுழற்சியை  ஒழுங்கு படுத்தி சீரமைக்கிறது என்றும் நம்பப்படுகிறது. வை முட்டையிடுவதற்கு சுமார் 180 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.  இதன் ஓராண்டு முட்டை உற்பத்தி சுமார் 105 ஆக இருக்கும். கடக்நாத்தின் முட்டைகள் ஆஸ்துமா மற்றும் நெஃப்ரிடிஸைப் குறைக்க உதவுகின்றன.                                                   


History of Kadaknath Chicken

   

மேய்ச்சலின் போது, குஞ்சுகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பின்வரும் தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். முதல் நாளில், குஞ்சுகளுக்கு மரேக்ஸ் நோய் தடுப்பூசி போடப்படவேண்டும். மேலும்இந்த தடுப்பூசியானதுஹேட்சரியில் தோலடி ஊசி மூலம் வழங்கப்படும். பின்னர் 7 வது நாளில், ராணிக்கேத் நோய் ஃப்ஸ்ட்ரெய்ன் / லசோட்டா மற்றும் ஐட்ராப் அல்லது நாசால்ட்ரோப் 0.2 மிலி ஊசி மூலம்செலுத்தப்படுகிறது. சுமார் 14 முதல் 16 நாட்கள் வரை, குஞ்சுகளுக்கு தொற்று பர்சல் நோய் (லைவ்) ஐபிடி (கில்டு) மூலம் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும்அதே நாளில், ஐட்ராப் 0.2 மிலி எஸ் / சியும்வழங்கப்படுகிறது.


History of Kadaknath Chicken 2

   

இதைத் தொடர்ந்து குஞ்சுகளுக்கு, ராணிக்கேட் நோய் - லசோட்டா ஸ்ட்ரெயின் மற்றும் ஐ டிடாப்  21 முதல் 30 நாட்களுக்குள் அளிக்கப்படுகிறது. மறுபடியும்  35 முதல் 45 நாட்களில்  குஞ்சுகளுக்கு  ஐ டிராப் உடன் இன்பெக்டியஸ் பர்ஸல் டிசீஸ் (லைவ்) ஐபிடி (கில்டு) கொடுக்கப்படுகிறது. 56 முதல் 70 நாட்களுக்கு இடையில், ராணிக்கேத் நோய் "கே" (மெசொஜெனிக்) தடுப்பூசி மற்றும் தோலடி ஊசி  மூலம் செலுத்தப்படுகிறது. 84 முதல் 91 நாட்களில்  பௌல்  போக்ஸ் வேக்சின்  வழங்கப்படுகிறது. மற்றும் இது வெப் வெப் பஞ்சர் அல்லது இன்ட்ராமுஸ்குலர் மூலம் செலுத்தப்படுகிறது. மேலும் 126 முதல் 133 நாட்கள் முடிவில், ராணிக்கேத் நோய் "கே" (மெசொஜெனிக்) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தோலடி ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

--*--


Aqgromalin provides quality chicks from certified and hygienic hatcheries. You can order from our website (aqai.in) or from the AQAI app - 
Get it on Google Play
Get it on App Store
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.