கால்நடை வளர்ப்பில்,இது , பல கிராமப்புற குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தர உதவுகிறது. கோழி வளர்ப்பு , கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய உற்பத்தி குறையும் போது இது ஒரு கூடுதல் வருமான ஆதாரமாக மாறியுள்ளது
பெரிய அளவில், கோழி வளர்ப்பினால் கிட்டும் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 6% சதவிகித வளர்ச்சிக்கு துணை புரிகிறது. தற்போது இதன் மதிப்பு 1 லட்சம் கோடி அல்லது 15.38 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 2024 க்குள் இந்திய மதிப்பில் 4,340 பில்லியன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்று வேகமாக வளர்ந்து வரும் தொழிலில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளைத் தவிர்த்தால் எவ்வித தடையுமின்றி முன்னேறும்.
உற்பத்தித்திறனை அதிகரிக்கும் அதே வேளையில் இழப்புகளைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த வழி நோய், நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு எண்ணிக்கை ஆகியவற்றைக் கண்காணிப்பதாகும். கோழித் வளர்ப்புத் துறையில் கோழிகளின் ஆரோக்கியம், நோய் கண்டறிதல் மற்றும் நோய் ஒழிப்பு போன்றவற்றை ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசி அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் கண்காணிப்பது அவசியம்
தடுப்பூசி என்றால் என்ன?
தடுப்பூசி என்பது உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய வழிமுறைகளில் ஒன்று. இது கோழி வளர்ப்பு பண்ணைகள் முழுவதையும்
அச்சுறுத்தி சிதைக்கும் கொடிய நோய்களைத் தடுப்பதற்கான ஒரு வழிமுறையாகும். நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் பல உள்ளன. அவை- ஒட்டுண்ணிகள், புரோட்டோசோவா, பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ். இந்த அனைத்து நுண்ணுயிர்களையும் மருந்துகளால் எதிர்த்துப் போராட முடியும். ஒரு பாக்டீரியா தாக்குதலுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளன, ஆனால் வைரஸ் பாதிப்புக்கு அத்தகைய எதிரிணைகள் இல்லை; அதனால் தடுப்பூசி என்பது மிக அவசியம் ஆகும்.
கோழிகளுக்கு தொற்று ஏற்படுத்தும் வைரஸ் நோய்களை தடுக்கவும்,, பண்ணை மட்டத்தில் தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்தாக அவற்றைக் குறைக்க அல்லது அவசர மருத்துவ தேவை ஏற்படும் அளவிளான நோய் தொற்றைத் இவை , இதனால் உற்பத்தியானது அதிகரிக்கும்.
இதற்கு ஏற்ப, அனைத்து முட்டையிடும் கோழிகளும் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு பிறந்த குஞ்சுகளாக இருக்கும்போதே தடுப்பூசிக்கு உட்படுத்தப்படுகின்றன.
அகுவாயில், எங்கள் கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்வதில் நாங்கள் மிகவும் பொறுப்புடனும், கவனத்துடனும் இருக்கிறோம். ஒவ்வொரு வகையிலும், நோய்க்கிருமிகளை செயலிழக்கச் செய்யும் மற்றும் பறவைகளின் உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்தை காக்கும் வகையிலான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்யும் வகையிலான தடுப்பூசிகள் மிக கவனத்துடன் போடப்படுகின்றது.
To know more about our certified farms, infrastructure and operations, click here