வெள்ளை பீக்கிங் வாத்துகளுக்கு தடுப்பூசி

05 Aug 2021 03:43 PM Comment(s) By Aqgromalin Team

பீக்கிங்  அல்லது வெள்ளை பீக்கிங் வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய  வகையைச் சேர்ந்த வாத்துகள். இது  முக்கியமாக முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. இது சீனாவில் உள்ள மல்லார்டு என்ற பகுதியில் அதிகமாக  வளர்க்கப்பட்டது. இவை மஞ்சள் நிற அலகு, கிரீமி வெள்ளை நிற இறகுகள் (சில மஞ்சள் நிறத்துடன்) ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த கொண்டை ஆகிய பண்புக்குணங்களின் அடிப்படையில் இணம்காணப்படுகிறது.  வாத்து குஞ்சுகள் பிரகாசமான மஞ்சள் நிற இறகுகள் கொண்டவை. இவை  தாங்கமுடியான அதிக வெப்பமான காலநிலையிலும் வளரக்கூடியவை. இவை  அதிக நோய்எதிர்ப்புச் சக்தியைக் கொண்டவை. வேகமாக வளரக்கூடியவை, இறைச்சிக்கு ஏற்றவை. மேலும்,  இவற்றை  வளர்ப்பது மிக எளிதானது. 

1 நாள் வயதான வாத்துகள் சராசரியாக 40-50 கிராம் எடையுடையவையாக இருக்கும் . முழுமையாக வளர்ந்த 8 வாரங்கள் கொண்ட வாத்துக்கள் சுமார் 2-2.5 கிலோ எடையுடையவையாக இருக்கும். சுமார் 40-45 நாட்களாக இருக்கும் போது வாத்துகள் முட்டையிடுவதற்காக அடைக்கப்படும்.  அவற்றின் ஆண்டு முட்டை உற்பத்தி  எண்ணிக்கை சுமார் 150-200 ஆகும். மேலும் இவை 1: 2.3-2.7 என்ற உயர் தீவன மாற்ற விகிதத்தைக் கொண்டுள்ளன.

 

வாத்து முட்டை உயர்தரமான புரதச்சத்தைக் கொண்டவை. கோழி முட்டையிலுள்ள புரதச்சத்தை விட  வாத்து முட்டையிலுள்ள புரதச்சத்தின் அளவு சற்று அதிகம். வாத்து முட்டைகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. மிக முக்கியமாக, அவை கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும்  தேவையான வைட்டமின் பி 12 ஐ கொண்டுள்ளன.  இது இரத்த சிவப்பணு உருவாக்கம், டிஎன்ஏ தொகுப்பு மற்றும் ஆரோக்கியமான நரம்பு செயல்பாட்டிற்கு அவசியமானது.  மேலும் வாத்து இறைச்சி புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பின் சிறந்த ஆதாரமாக இருப்பதுடன், இதில் செலினியம், இரும்பு மற்றும் நியாசின் உள்ளிட்ட நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தைராய்டு பிரச்சனைகளைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. 

வாத்துகளின் வளர்ச்சியின் போது  மேற்கொள்ள வேண்டிய தடுப்பூசி அட்டவணை பின்வருமாறு.  30 நாட்களில், வாத்துகளுக்கு டக் காலரா தடுப்பூசியின் கொடுக்கப்பட்டு, தோலடி ஊசி போடப்படுகிறது.  பின்னர், 35-40 நாட்களுக்கு இடையில், வாத்து வைரஸ் ஹெபடைடிஸ் மற்றும் தோலடி ஊசி வாத்துகளுக்கு ஊசி மூலம்  செலுத்தப்படுகிறது. சுமார் 45-50 நாட்களில், அவைகளுக்கு,  தோலடி ஊசி மூலம்  டக் பிளேக் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் அல்லது கால்நடை மேற்பார்வையாளர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். கால்நடை மருத்துவர் பரிந்துரையின்படி 2 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யப்பட வேண்டும்.


"Aqgromalin provides quality chicks from certified and hygienic hatcheries. You can order from our website (aqai.in) or from the AQAI app - "


Get it on Google Play
Get it on App Store
Share -
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.